திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்திய ஆக்கிரமிப்புப் படை வருகை (1987) இவற்றுக்கெதிராக, தமிழீழவிடுதலைப் போரை தூக்கி நிறுத்த, ஈழமக்களை சடுதியாக ஒன்று திரட்ட, தன்னை சாவு வரை வருத்தி மாண்ட மாவீரன்.திலீபன் நினைவை ஈழவிடுதலையை தொடர்ந்து நசுக்கும் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடிப்போம்!

Tuesday 16 September 2014

திலீபன்: இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான அறைகூவல்


திலீபன்: இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான அறைகூவல்

``நான் எனது உயிரிலும் மேலாக 

நேசிக்கும் உங்களிடம் ஒரு 

பெரும்பொறுப்பை விட்டுச் 

செல்கிறேன். நீங்கள் அனைவரும்

பரிபூரணமாக கிளர்ந்தெழ

வேண்டும், இங்கு ஒரு மாபெரும் 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.``

ENB-Documents: THE INDO-SRI LANKA ACCORD

ENB-Documents: THE INDO-SRI LANKA ACCORD: July 29-1987 Text: THE INDO-SRI LANKA ACCORD To establish pe...

பிரபாகரன் சுதுமலைப் பிரகடனம்

திலீபன் கலைமாமணி வீரமணி ஐயரின் அஞ்சலிப்பா!

thileepan veeramani

திலீபன் இந்தியப்படையை எதிர்த்து ஆயுதம் ஏந்துவோம்.

திலீபனின் சோசலிசக் கனவு!


திலீபன் தியாகம் குறித்து பிரபாகரன்

"தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான்".

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

திலீபன் விட்டுச்சென்ற பொறுப்பு.



நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். 

மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது 
என்பதே ஒரே ஏக்கம். 

நான் எனது உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும்பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெளவேண்டும். இங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

 அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். 

இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற 
போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன். 

 திலீபன். 

திலீபனின் 5 உண்ணாவிரத கோரிக்கைகள்

ஐந்து அம்சக் கோரிக்கை,

1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.


மக்கள் நினைவில் திலீபன்


Monday 15 September 2014

தியாகி திலீபனின் இறுதி உரை

திலீபன் : எனது இறுதி விருப்பம்

 எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன்.

நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப்போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொரியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தலைவரின் அனுமதியை கேட்டபோது அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன.

`` திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்`` என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் உயிரினும் மேலான சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம்........(சோசலிசத் தமிழீழம்)  அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள், எனது இறுதி விருப்பமும் இதுதான்.”